மேசியாவின் அடையாளம் THE SIGN OF THE MESSIAH 58-05-28 1. … ஒரு தரிசனத்திற்காக, முதலாவது செய்ய வேண்டியது என்ன, அங்கே அவருடைய வார்த்தை இருக்கிறது. அது ஆவியினால் ஏவப்பட்டுள்ளது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் பொய் சொல்லியிருக்க முடியுமா, அல்லது அவர் வெறுமனே விளையாட்டாக நகைச்சுவை சொல்லியிருக்கிறாரா? அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர், ‘பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதா கிரியை செய்து வருகிறார், நானும் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறேன்.’ (யோவான் 5:17,19). 2.இது வாலிப ஜனங்களுக்காக: இயேசு என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பின ஒரு தரிசனத்தை இயேசு கண்டு, அவர் அப்படியே அதை நாடகமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்ப்பதற்கு நீங்கள் இன்று எங்களோடு சாப்பாட்டு மேஜையில் இருந்திருக்க வேண்டும், அதே காரியம் சம்பவித்தது. (மத்தேயு 28:20) (யோவான் 14:19) 3.இப்பொழுது, கவனியுங்கள், அதன்பிறகு அவர் இந்த வார்த்தைகளைப் பேசினதாக வேதவாக்கியம் கூறுகிறது: ‘இன்னும் கொஞ்சகாலத்திலே உலகம் என்னைக் காணாது,’ அதாவது அவிசுவாசிகள் காண மாட்டார்கள், ‘நீங்களோ என்னைக் காண்பீர்கள்: உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட, உங்களுக்குள்ளும் இருப்பேன்’ என்று. 4.இப்பொழுது, அது உண்மையா அல்லது உண்மை இல்லையா? நாம் அப்படியே - அப்படியே அதைக் குறித்துப் பேசி, நம் மத்தியிலே அதை விவாதிப்போம். அது சத்தியம் தானா? ‘நான்...’ நான் என்பது ஒரு தனிப்பட்ட பிரதிபெயர். ‘உலகத்தின் முடிவுபரியந்தம், நான் உங்களுடனே கூட, உங்களுக்குள் இருப்பேன். இன்னும் கொஞ்ச காலத்திலே, அவிசுவாசிகள், சபை உலகத்தினர், உள்ளே பிரச்சனையாயிருப்பார்கள், அவர்கள் இனி என்னைக் காண மாட்டார்கள்; ஆனால் சபையாகிய நீங்கள் தானே, நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், காலத்தின் கடைசி வரையிலும் இருப்பேன்.’ உலகமானது இன்னும் முடிவுக்கு வரவில்லை, அவ்விதமாய் கிறிஸ்து தொடர்ந்து மாறாதவராயிருக்கிறார். (யோவான் 15:5) 5.இப்பொழுது, அவர், ‘நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்’ என்றார். இப்பொழுது, திரட்சச்செடி தன்னில் தானே கனிகொடுப்பதில்லை, அது கொடிகளை சுத்தப்படுத்த (purges) மாத்திரமே செய்கிறது, கொடிகள் தான் கனி கொடுக்கிறது. உங்களுக்கு அது தெரியுமா? நல்லது அப்படி யானால், நீங்கள் ஒரு திராட்சக் கொடியிடம் போவீர்களானால், நீங்கள் எதைக் காணும்படி எதிர்பார்க்கலாம்? திராட்சப்பழங்களை. நீங்கள் ஒரு தர்பூசணி கொடியிடம் போவீர்க ளானால், அது செழிப்பான கொடியாக இருக்குமானால், நீங்கள் தர்பூசணி பழங்களைக் காணலாம். நீங்கள் ஒரு பீச் மரத்திடம் போவீர்களானால், நீங்கள் பீச் பழங்களைக் காணலாம். (யோவான் 14:12) 6.ஆனால் அப்படியானால், நீங்கள்... கிறிஸ்து திராட்சச் செடியாக இருப்பாரானால், அவருடைய சபை அங்கத்தினர் கள் கொடிகளாக இருக்கிறார்கள், (அப்படியானால்) நீங்கள் சபையில் எதைக் காண வேண்டும்? ‘நான் என் பிதாவி னிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்; இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள்.’ 7.நீங்கள் சபைக்குப் போகும் போது, எதைக் காண்கிறீர்கள்? ‘நாங்கள் பிரஸ்பிடேரியன்கள்.’ ‘நாங்கள் பாப்டிஸ்டுகள்.’ ‘நாங்கள் பெந்தெகோஸ்தேகாரர்கள்.’ ‘எங்களுக்கு செய்தி உண்டு.’ ‘ நாங்கள் இதைப் பெற்றிருக்கிறோம்.’ 8.அது கிறிஸ்துவல்ல. கிறிஸ்து அன்பாக இருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனாக இருக்கிறார். ‘... நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்துகொள்வார்கள்.’ 9.ஆனால், ‘நாங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போக மாட்டோம்; எங்கள் சபை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காது.’ (யோவான் 6:37) 10.சரி. ‘பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் வரும்’ என்று இயேசு கூறியிருக்கிறார். 11.இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது நாம் அந்த வேதவாக்கியத்தை ஆராய்ந்து பார்த்து, பிறகு, அவர் மேசியா என்பதை ஜனங்கள் அறியும்படிக்கு, அவர் அங்கே முன்காலத்தில் என்ன செய்தார் என்பதைக் கண்டுபிடிப்போம். அவர் மேசியா என்று ஜனங்களிடம் நிரூபிக்கும்படியாக அவர் அப்போது என்ன செய்தாரோ, இப்பொழுதும் அவர் அதே காரியத்தைச் செய்தாக வேண்டும், அல்லது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அல்ல. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 12.இப்பொழுது, நாம், நாம், நமது சபைகள், ‘ஓ, எங்களுக்கு இந்த ஸ்தாபனம் இருப்பதால், நாங்கள் இந்த அறக்கட்டளையை உடையவர்களாயிருக்கிறோம்’ என்று வித்தியாசமாக கூறுவதை நான் அறிவேன். 13.அந்தக் காரியங்கள் அருமையானது தான், ஆனால் கிறிஸ்து செய்தது அதுவல்ல, செய்ய வேண்டுமென்று அவர் சொன்னதும் அதுவல்ல, அல்லவே அல்ல. 14.எனவே, கவனியுங்கள், நாம் பின்னால் திருப்பு வோம்; நாம் பரிசுத்த யோவானை வாசித்துக் கொண்டிருக் கிறோம்; நாம் முதலாவது அதிகாரத்திற்குத் திரும்பிப் போவோம்; நாம் 12வது அதிகாரத்தில் இருக்கிறோம்; நாம் முதலாவது அதிகாரத்திற்குத் திரும்பிப் போய், அவர் இங்கே சொன்ன விதமாக, இந்த-இந்த மேற்கோள்களை ஏன் அவர் சொன்னார் என்ற காரணத்தைக் கண்டுகொள்வோம். சரி. பரிசுத்த யோவான் முதலாவது அதிகாரத்தில், அவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகுள்ள காரியங்களை இங்கே கண்டுகொள்கிறோம், அப்போது தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் வந்தார்... (யோவான் 1:14) (யோவான் 3:34) 15.அவர் ஆவியை அளவில்லாமல் கொண்டிருந்தார். நாம் அதை அளவோடு கொண்டிருக்கிறோம். இதோ இந்தக் கருத்து: அங்கே வெளியே சமுத்திரத்திலுள்ள எல்லா தண்ணீர்களும் கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஆவியாக இருந்தது; அந்த சமுத்திரத்திலுள்ள ஸ்பூன் நிறைய தண்ணீர் நமக்குள்ளிருக்கிறது, ஆனால் சமுத்திரம் முழுவதிலுமுள்ள அதே இரசாயனமே ஒரு ஸ்பூன் நிறைய உள்ள தண்ணீரிலும் இருக்கிறது, அந்த அளவு அதிகமாக அல்ல. அவர் அதை உடையவராயிருந்தார், எல்லா தண்ணீர்களும் அவருக்குள் இருந்தது, நாமோ ஒரு ஸ்பூன் நிறையவே கொண் டிருக்கிறோம். அவர் இவ்வாறு இருந்தார்: தேவன் மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினவராக அவர் இருந்தார்; அவர் இம்மானுவேலாக இருந்தார். ஆனால் நாமோ அவருடைய கிருபையினால் சுவிகார புத்திரர்களாக இருக்கிறோம். 16.இப்பொழுது, அவர் பரிசுத்த ஆவியின் முழுமை யில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்த பிறகு, அங்கே தான் நாம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்கிறோம், அவர் பரிசுத்த ஆவியை முழுமையாகப் பெற்றிருந்தார், இப்பொழுது, உடனடியாக இங்கே பரிசுத்த யோவான் 1ம் அதிகாரத்தில் அவருடைய ஊழியம் துவங்குவதை நாம் கண்டுகொள்கிறோம். (யோவான் 1:42) 17.அங்கே இரட்சிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மனிதன் இருந்தான். அவன் இரட்சிக்கப்பட்ட உடனே, அவன் தன்னு டைய சகோதரனாகிய சீமோனுக்காக போய், தன்னுடைய சகோதரனை கர்த்தராகிய இயேசுவின் சமுகத்திற்குத் திரும்ப வும் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு முதல்முறையாக அவனைக் கண்ட போது, அவனுடைய பெயர் என்னவென்று அவனிடம் கூறி, அவர் அதை சீமோனிலிருந்து, கேபா என்னப்பட்ட பேதுருவுக்கு மாற்றப்போவதாக அவனிடம் கூறினார். அவர் என்ன செய்தார்? அவனுடைய தகப்பனாரின் பெயர் என்னவென்று அவர் அவனிடம் கூறி, அதுதான் யோனா, ‘நீ, அல்லது, உன்னுடைய பெயர் சீமோன்; நீ யோனாவின் குமாரன்’ என்றார். (அப். 4:13) 18.இப்பொழுது இது முதலாவது காரியம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பேதுரு படிப்பறிவற்றவனாகவும் பேதமையுள்ளவனாகவும் இருந்தான், அவன் ஒருபோதும் எந்தக் கல்வியையும் பெற்றிருக்கவில்லை, அவனால் தன்னுடைய சொந்த பெயரைக் கூட கையொப்பமிட முடியாதவனாக இருந்தான். அவன் படிப்பறியாதவனாகவும் பேதமை யுள்ளவனாகவும் இருந்ததாக வேதாகமம் கூறுகிறது. கல்வி யானது அவ்வளவு பெரிய ஒரு பாகத்தை செயல்படுத்தி யிருக்கும் என்றால், இதைக் குறித்து என்ன? அந்த மனிதனுக்கு பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டனவே. 19.நம்முடைய பள்ளிகள் மற்றும் காரியங்கள் எல்லாவற்றைக் கொண்டும் நாம் எங்கே போயிருக்கிறோம்? நாம் அவைகளை உடையவர்களாக இருக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நீங்கள் உங்கள் கல்வியின் பேரில் மிக அதிக அழுத்தம் கொடுத்து வருகிறீர்கள். அது சரியே, ஆனால் அது ஒருபோதும் உங்களை இரட்சிக்காது; நீங்கள் கவனிக்கவில்லை என்றால், அது உங்களை நரகத்துக்கு தள்ளி விடும். சுவிசேஷத்துக்கு எப்பொழுதும் இருந்ததிலேயே மிகப்பெரிய தடையாக கல்வி இருந்து வருகிறது. அது சரியே, ஏனென்றால் ஜனங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் அதிபுத்திசாலிகளாக இருக்க முயற்சி செய்கிறார்கள். 20.அது, நம்முடைய குற்றவாளிகளின் குற்றப்பதிவு களைப் (பார்க்கும் போது)... இளம்பருவத்தினருக்குரிய FBI புலனாய்வுத்துறையின் தலைவரான, கேப்டன் அல்பெரார் அவர்கள் என்னுடைய கூட்டத்தில் மனமாற்றமடைந்து, ‘சகோதரன் பிரன்ஹாமே, அதைக் குறித்த உம்முடைய வாக்குமூலம் உண்மையாக உள்ளது. ஐக்கிய நாடுகளில் கடந்த பத்து வருடங்களில் நடந்த இளம்பருவத்தினர் செய்த ஒவ்வொரு குற்றச்செயல்களையும் நான் சரியாக இங்கே உம்மிடம் எடுத்துக் கொண்டு வருவேன், அது கல்வி கற்ற ஜனங்கள் மத்தியில் தான் நடந்துள்ளது’ என்றார். அது சரியே. அதில் தொண்ணூறு சதவீதம் கல்வி கற்ற ஜனங்கள் மத்தியில் தான் நடந்துள்ளது. அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள், அவர்களால் சட்டத்தை தீர்த்துக்கொள்ள (out-figure)  முடியும் என்றும் அதைப் போன்ற காரியங்களைச் செய்ய முடியும் என்றும் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அவ்வாறு (குற்றம் புரிந்து), பிரச்சனையில் மாட்டிக்கொள்வதற்கு அதுதான் காரணம். (மத்தேயு 16:18) 21.அவர்கள், ‘நல்லது, எங்களுக்கு ஒரு மகத்தான சபை உள்ளது; எங்களுக்கு ஒரு மகத்தான பெயர் உள்ளது’ என்று எண்ணிக்கொள்கிறார்கள். அது அதுவல்ல. நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்றால், நீங்கள் முற்றிலும் இழக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் காரியமில்லை. ஆபேல் எவ்வளவு நல்லவனாக இருந்தானோ அவ்வளவு நல்லவனாக காயீனும் இருந்து, ஆபேலைப் போன்று அதேவிதமாக ஆராதித்தான், ஆபேலைப்போன்று அதேவிதமாக ஒரு சபையைக் கட்டி, ஆபேலைப் போன்றே அதேவிதமாக ஒரு பலியைச் செலுத்தினான்; தேவனோ அவனைப் புறக்கணித்து விட்டார், ஏனென்றால் அவனுக்கு எது சரியென்ற ஆவிக்குரிய வெளிப்பாடு இருக்கவில்லை. இயேசு, ‘அந்த அதே ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் அவர் தம்முடைய சபையைக் கட்டியிருக்கிறார்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது’ என்றார். பரிசுத்த ஆவியானவர் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆவிக்குரிய வெளிப்பாடு. 22.இப்பொழுது, இயேசு என்ன செய்து கொண் டிருந்தார்? அவர் யூதர்களிடம் சென்று, தம்மை அறியப் பண்ணிக் கொண்டிருந்தார். இப்பொழுது, இது சம்பவித்த உடனே, பிலிப்பு என்ற பெயருடைய ஒருவன் அங்கே இருந்தான். அவன் சிலிர்ப்படைந்ததாக நினைத்தான், எனவே அவன் அந்த மலையைச் சுற்றி 15 மைல்கள் பிரயாணம் செய்து போய், நாத்தான்வேல் என்ற பெயருடைய அவனுடைய நண்பனைக் கண்டுபிடித்தான். நாத்தான்வேல், இவன் அவனைக் கண்டுபிடித்த போது, அவன் ஒரு மரத்தின் கீழே ஜெபித்துக் கொண்டிருந்தான். நாத்தான்வேல் ஜெபம் செய்வதை முடிப்பது வரையில், இவன் காத்துக் கொண்டிருந்தான், அவன் அநேகமாக, அவன் (ஜெபத்தை விட்டு) எழுந்த போது, அவன், ‘ஹலோ, பிலிப்பு. உன்னைக் காண்பதில் மகிழ்ச்சி’ என்றான். (யோவான் 1:45) 23.இவன், ‘நாங்கள் யாரைக் கண்டுபிடித்தோம் என்பதை வந்து பார்’ என்றான். அதுதான் அது, ‘எப்படி யிருக்கிறாய்? உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. உன்னுடைய மனைவி சுகமா?’ என்று கேட்பதற்குக் கூட நேரமில்லை. அவனிடம் ஒரு செய்தி இருந்தது. 24.சபையானது எப்பொழுதாவது கிறிஸ்துவைக் குறித்து அந்த புளகாங்கித உணர்ச்சியைப் பெற்றுக்கொள்ளுமானால், ஏதோவொன்று சம்பவிக்கும். ஆனால் நாம் தொடர்ந்து செல்லும்படியாக எல்லாவிதமான சமுக மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் பெற்றிருக்கிறோம். நாம் மரித்துக் கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. நிச்சயமாக. ரஷ்யா இங்கே வந்து... செய்யப் போகிறதோ என்பதைக் குறித்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். ஆப்பிள் பழத்திற்கு தீங்கு விளைப்பது ராபின் பறவை அதைக் கொத்துவதனால் அல்ல, அதைக் கொல்வது அதன் உட்பகுதியிலுள்ள புழு தான். நமது மத்தியிலுள்ள நம்முடைய சொந்த அழுகிப்போன தன்மை தான் நம்மைக் கொன்று கொண்டிருக்கிறது. 25.தேவனுக்காக நின்ற முதுகெலும்புடைய மனிதர் களும் ஸ்திரீகளுமாக உள்ள உண்மையான கிறிஸ்தவனாக நாம் இருந்தோம்... புதன்கிழமை இரவு சபைக்குப் போவ தற்குப் பதிலாக, ராக்-அன்ட்-ரோல் தொலைக்காட்சியைக் காண்பதற்கும், மற்றும் ஆர்தர் காட்பிரேயைக் காண்பதற்கும், ரேடியோவிலுள்ள இந்த மற்ற எல்லா ஜனங்களையும், நாங்கள் சுசியை நேசிக்கிறோம் என்பதையும் காண்பதற்கு நாம் வீட்டிலேயே தங்கி விடுகிறோம். நீங்கள் தேவனை நேசிப்பதைக் காட்டிலும் உலகத்தையே அதிகம் நேசிக்கிறீர்கள் என்பதையே அது காட்டுகிறது. உங்களுடைய இருதயம் தேவனுக்காக இருக்குமானால், தேவனே முதலாவது வந்து, அதுவே உங்கள் இருதயத்தில் முழுவதுமாக இருக்கும். (யோவான் 1:45) 26.நாத்தான்வேல்... ‘நாங்கள் கண்ட, யோசேப்பின் குமாரனாகிய, நாசரேத்தூர் இயேசுவை வந்து பார்’ என்றான். 27.இப்பொழுது அவன்... அவன், ‘இப்பொழுது பிலிப்புவே, ஒரு நிமிடம் பொறு. நீ நிச்சயமாக அதனுடைய மோசமான முடிவுக்கு போய் விட்டாய். நீ அடி ஆழத்துக்குப்போய் விட்டாய். நீ ஒரு மனிதன், ஒரு நேர்மையான மனிதன் என்பதை நான் அறிந்திருக்கிறேன், நீ அதைப் போன்ற ஏதோவொன்றோடு போய் விட்டதை நீ இங்கே என்னிடம் கூற விரும்புகிறாயா? ஏன், நீ ஏதோவொரு மதவெறித் தனத்தைப் பெற்றிருக்க வேண்டும். பிலிப்புவே, உனக்குத் தெரியுமா, அந்த ஆள் மேசியாவாக இருந்தால், அவர் எங்கிருந்து வருவார் என்று உனக்குத் தெரியுமா? அவர் எருசலேமுக்குப் போயிருப்பார். அவர் ஆசாரியரிடத்திற்கு, பிரதான ஆசாரியரிடத்திற்குப் போயிருப்பார். அவர், ‘தேவனுடைய பிரதான ஆசாரியனாகிய மகத்தான காய்பாவே, நீ தேசத்திலேயே அதிபுத்திசாலி என்பது எங்களுக்குத் தெரியும், நீ தேசத்திலேயே மிகப்பெரிய பக்தியுள்ள மனிதன் என்பதையும், பரிசுத்த ஆசாரியர்களாகிய எல்லா மனிதர்களே, வார்த்தை முழுவதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்’ என்று கூறுவார். அவர் அங்கே வந்து, அவர் தம்மை அறியப்பண்ணுவார்’ என்று சொல்லுவதை கேட்பதாக என்னால் அப்படியே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. 28.அவர் வத்திக்கான் பட்டணத்திற்குப் போயிருப்பார் என்று கத்தோலிக்கர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் பிஷப்பிடம் போயிருப்பார் என்று பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் மாகாண கண்காணிப்பாளரிடம் போயிருப்பார் என்று பெந்தெகோஸ்தேகாரர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால் அவர் யாரிடம் போக விரும்புகிறாரோ அவர்களிடம் தான் அவர் போகிறார். அது அவருக்கு அடுத்ததாக இருக்கிறது. (யோவான் 1:46) 29.அவன், ‘நாசரேத்தூரிலிருந்து நன்மையான எதுவும் வர முடியுமா?’ என்று கேட்டான். 30.எந்த மனுஷனும் அவனுக்கு மறுமொழி கொடுக்கக் கூடியதான மிகச்சிறந்த பதிலை பிலிப்பு அவனுக்குக் கொடுத்தான். அவன், ‘வந்து நீயே பார்’ என்றான். அங்கே தான் வழி இருக்கிறது. வீட்டிலேயே இருந்து கொண்டு குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். போய் கண்டு கொள்ளுங்கள்; அதை வேதவாக்கியங்களில் ஆராய்ந்து பாருங்கள். வந்து நீங்களாகவே கண்டுகொள்ளுங்கள். அந்த மலையைச் சுற்றிலுமுள்ள பாதையில், நாத்தான்வேல்... என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. இவன் அவனிடம், ‘அச்சமயத்தில் அந்த ரசீதில் கையொப்பமிடக் கூடாத அந்த வயதான மீனவனிடமிருந்து நீ அந்த மீனை வாங்கினது உனக்குத் தெரியுமா?’ என்று கூறிக் கொண்டிருந்தான். 31.‘ஆமாம்.’ 32.‘அவன் அன்றொரு நாள் அவர் முன்பாக வந்தான். அவனுடைய பெயர் சீமோன் என்று உனக்குத் தெரியும், அவனுடைய பெயர் என்னவென்றும் அவனுடைய தகப்பனுடைய பெயர் என்னவென்றும் அவர் அவனிடம் கூறினார். நீ யார் என்று அவருக்குத் தெரியாமல் போகுமானால், அது என்னை ஆச்சரியமடையச் செய்யும்.’ 33.‘ இப்பொழுது, பிலிப்புவே. இப்பொழுது, பிலிப்புவே. இப்பொழுது, அந்தக்காரியத்தை உன்னால் என்னிடம் கூற முடியாது. நான் அங்கு போய் சேரும் போது, நான் என்னுடைய மனதை செலுத்திப் பார்ப்பேன்.’ (யோவான் 1:47-49) 34.இப்படியாக அவன் முதல் முறையாக இயேசுவின் சமூகத்துக்குள் நடந்து வந்த போது, இயேசு சுற்றும் முற்றும் பார்த்து, ‘இதோ கபடற்ற இஸ்ரவேலன்!’ என்றார். இப்பொழுது, அவன் ஒரு அரபியனாக இருந்திருக்க முடியும். அவன் ஒரு கிரேக்கனாக இருந்திருக்க முடியும். அவர்கள் எல்லாருமே ஒரேமாதிரி உடையுடுத்தி, ஒன்று போலவே தோற்றமளித்தார்கள், அவர்கள் கருப்பு (dark) இன ஜனங்களாகவும், தாடி வைத்துக்கொண்டும், தலைப்பாகை களையும் தளர்த்தியான ஆடைகளையும், அங்கிகளையும் அணிந்து கொண்டும் இருந்தார்கள். அல்லாமலும் அவன் ஒரு நாஸ்திகனாக இருந்திருக்க முடியும். அவன் ஒரு குற்றம் கண்டுபிடிக்கிறவனாக இருந்திருக்கலாம், ஆனால் அவரோ, ‘நீ கபடற்ற நீதிமான்’ என்றார். 35.உடனே அவன் அவரைப் பார்த்து, அவன், ‘ரபி, நீர் என்னை எப்போது அறிவீர்? நான் உம்மை எப்பொழுதாவது காண்பதோ, அல்லது நீர் என்னைக் காண்பதோ இதுதான் முதல் தடவை. நீர் என்னை எப்பொழுது அறிவீர்?’ என்றான். 36.அவர், ‘பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போதே, உன்னைக் கண்டேன்’ என்றார். 37.அப்போது அந்த யூதன் என்ன சொன்னான்? இதோ - ஒரு உண்மையான விசுவாசியின் மனப்பான்மை இதோ இருக்கிறது. அவன் அவரைப் பார்த்து, ‘நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் இராஜா’ என்றான். (மத்தேயு 12:24) (மாற்கு 3:22) (லூக்கா 11:15) 38.ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த அந்த புத்திசாலி ஆசாரியர்கள், அவர்கள், ‘இவன் பெயல்செபூல். இவன் குறிசொல்பவன்’ என்றனர். (மத்தேயு 12:32) (மாற்கு 3:28,29) (லூக்கா 12:10) 39.இயேசு திரும்பிப் பார்த்து, ‘மனுஷகுமாரனாகிய எனக்கு விரோதமாக பேசும் உங்களை நான் மன்னிப்பேன்: ஆனால்’ என்றார், வேறு வார்த்தைகளில் கூறினால், ‘பரிசுத்த ஆவியானவர் வருகிற ஒருநாள் வருகிறது, அப்போது அவர் இதே காரியத்தைச் செய்யும் போது, இதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் இம்மையிலும் மறுமையிலும் ஒருக்காலும் மன்னிக்கப்படாது.’ வேதவாக்கியம் அவ்வாறு கூறுகிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. மன்னிக்க முடியாத பாவம் என்றால் என்னவென்றால், பரிசுத்த ஆவியை, பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை அசுத்தமான காரியம் என்று அழைப்பது தான். அங்கே... ‘நீங்கள் அதற்காக ஒருபோதும் மன்னிக்கப்படவே முடியாது’ என்று இயேசு கூறியுள்ளார். (மத்தேயு 15:22) (மாற்கு 7:25,26) 40.இப்பொழுது, நீங்கள் கவனித்தீர்களா? இயேசு அதை ஒருபோதும் ஒரு புறஜாதியிடம் செய்யவில்லை, ஒரு புறஜாதியானின் முன்னிலையிலும் கூறவில்லை, ஏனென்றால் தம்முடைய சீஷர்கள் புறஜாதிகளிடம் போவதை அவர்-அவர் தடைபண்ணினார். சீரோபேனிக்கியா ஸ்திரீ அவரிடம், ‘நீர் வந்து, என்னுடைய மகளுக்கு இரக்கம் செய்யும்’ என்று கூறின போது. (மத்தேயு 15:26) (மாற்கு 7:27) 41.அவர்... அவள் சொன்னாள்... அவர், ‘நான்... மாத்திரமே. பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்களுக்குப் போடுகிறது எனக்கு நல்லதல்ல’ என்றார். (மத்தேயு 15:27) (மாற்கு 7:28) 42.அவள், ‘ஆம், ஆண்டவரே, அது உண்மை தான், நான் அதை அறிவேன்: ஆனால் நாய்கள் துணிக்கைகளைத் தின்னுமே’ என்றாள். (மத்தேயு 15:28) (மாற்கு 7:29) 43.அதற்கு அவர், ‘இது மகத்தான விசுவாசம்: நீ அந்தவிதமாக அதை விசுவாசிக்கிறபடியினால், போய் அதேவிதமாக அதைக் கண்டுகொள்’ என்றார். அவர் அவளிடம் சொன்னதெல்லாம் அவ்வளவு தான், அவளுக்காக எந்தத் தரிசனமும் இல்லை, அவளுடைய சொந்த விசுவாசமே அதைச் செய்தது. பாருங்கள். (மத்தேயு 10:5,6) 44.இப்பொழுது, அவர் அதைச் செய்தார், அவருடைய சீஷர்கள் அதைச் செய்யாதபடி அதைத் தடை செய்தார். இப்பொழுது, மூன்று இன ஜனங்கள் அல்லது இனங்களை உடைய ஜனங்கள் மாத்திரமே இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். அது காம், சேம், மற்றும் யாப்பேத்தின் ஜனங்களாவர். அதாவது யூதன், புறஜாதியான், மற்றும் சமாரியன், சமாரியர்கள் பாதி யூதரும் பாதி புறஜாதி யாருமாய் இருக்கிறார்கள். இராஜ்யத்தின் திறவுகோல்களை வைத்திருந்த பேதுருவைக் கவனியுங்கள்: அவன் பெந்தெ கோஸ்தேவில் அதை யூதர்களுக்குத் திறந்து கொடுத்து விட்டு, சமாரியா வழியாக கொர்நேலியுவின் வீட்டிற்குச் சென்றான்; அவன் அதை மறுபடியும் உபயோகிக்கவே யில்லை. உலகத்தில் மூன்று இன ஜனங்கள் தான் இருக்கிறார்கள். (யோவான் 1:11) 45.இப்பொழுது, ‘அவர்...’ தம்முடைய நாளில், ‘அவர் தமக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.’ இப்பொழுது, அவரைக் கேலி செய்து, அவர் பெயல்செபூல் என்றும், ஒரு பிசாசு என்றும், மனதிலுள்ளவைகளை வாசிப்பவர் என்றும், அல்லது ஒரு குறிசொல்பவர் என்றும், ஏதோவொரு அசுத்த ஆவி என்றும் சொன்னவர்களைப் பார்த்து, ‘அதற்காக நான் உங்களை மன்னிக்கப் போகிறேன்’ என்றார். அவர்கள் ஒருபோதும்... அப்போது பரிசுத்த ஆவியானது இன்னுமாக தேசத்தின் மேல் ஊற்றப்பட்டிருக்க வேயில்லை. ‘நான் உங்களை மன்னிப்பேன்: ஆனால் பரிசுத்த ஆவியானது வரும்போது, அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் அல்லது அது ஒரு போதும் மன்னிக்கப்படாது’ என்றார். (யோவான் 4:7-10) 46.மேலும் இப்பொழுது, கவனியுங்கள், ஒருநாள் அவர் சமாரியா வழியாகச் சென்றார். அவர் அவ்வாறு போன போது, அவருக்கு தேவை இருந்தது, அவர் அந்த வழியில் சென்று, கொஞ்சம் ஆகாரத்தை வாங்குவதற்காக அவர் தம்முடைய சீஷர்களைப் பட்டணத்திற்குள் அனுப்பினார். அங்கே ஒரு சிறு இடம் இருந்தது, பட்டணத்திற்கு வெளியே ஒரு கிணறு இருந்தது, அங்கே ஒரு சிறிய இயற்கை காட்சி இருந்தது, அங்கே பொது கிணறு இருக்கிறது, அங்கே அவர்கள் சென்று தங்களுக்கு தண்ணீரை எடுத்துக் கொள்வார்கள். அந்தக் கிணற்றுக்கு மேலாக போகும் ஒரு கருவி (windle) இருக்கிறது, அங்கே வெளியே பெண்கள் கொக்கிகளை உடைய குடங்களோடு வந்து, அவர்கள் சுற்றி வந்து, அவைகளைக் கிணற்றுக்குள் இட்டு, தண்ணீரை மொண்டு எடுத்து, அதை மேலே கொண்டு வந்து, தங்கள் தலையின் மேல் அதை வைத்து, ஒவ்வொரு இடுப்பிலும் ஒன்றை வைத்து, பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருப்பார்கள். 47.இயேசு தம்முடைய சீஷர்கள் திரும்பி வரும்படிக்கு அங்கே காத்துக் கொண்டிருந்தார். அவர் காத்துக் கொண்டிருக்கையில், அவள் ஒரு அழகான பெண்ணாக இருந்ததாக நாம் எடுத்துக்கொள்வோம், மிகவும் அழகான பெண் அங்கே வெளியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் ஒரு சமாரிய ஸ்திரீ. கொஞ்சம் வெள்ளம் கோருவதற்காக அவள் பானையைக் கிணற்றுக்குள் இறக்கத் தொடங்கினாள், அப்போது யாரோ ஒருவர், ‘பெண்ணே, எனக்குத் தாகத்துக்குத்தா’ என்று கூறுவதை அவள் கேட்டாள். 48.உடனே அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள், அங்கே ஒரு யூதர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவள், ‘நல்லது, நமக்கு ஒருவருக்கொருவர் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாதே. நீர் ஒரு யூதர், நான் ஒரு சமாரிய ஸ்திரீ, சமாரியப் பெண்’ என்றாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்களுக்குப் பிரிவினை இருந்தது, இனப்பாகுபாடுகள் அவர்களுக்கு இருந்தது. 49.ஆனால் அங்கே எந்த பாகுபாடும் இல்லை என்று அவர் அவளை அறிந்து கொள்ளச் செய்தார். அவர், ‘நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிந்திருப் பாயானால்; நீ என்னிடமே குடிக்கக் கேட்டிருப்பாய், அப்போது நீ இங்கே மொண்டுகொள்ள வராதபடிக்கு உனக்குத் தண்ணீரைக் கொண்டு வந்திருப்பேன், அல்லது உனக்குத் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்’ என்றார். 50.இப்பொழுது கவனியுங்கள், அது நேற்றைய இயேசுவாக இருந்தது. இப்பொழுது, அவர் சமாரியரிடம் இருந்தார். யூதன் மற்றும் சமாரியர்கள், அவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவும், இனங்களிலிருந்து வெளியே தூர இருப்பவர்களாகவும் (off- breed) இருந்தார்கள். இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். (யோவான் 4:12, 16-18) 51.அவள், ‘நீர் எங்கள் தகப்பனாகிய யாக்கோபிலும் பெரியவர் என்றா சொல்லுகிறீர்? அவர் இந்தக் கிணற்றைத் தோண்டினாரே’ என்றாள். பாருங்கள், அவர்களும் கூட தேவனை உரிமை கோரினார்கள். ‘அவர் இந்தக் கிணற்றைத் தோண்டினார். அவருடைய பிள்ளைகள் இதிலிருந்து குடித்து, அவருடைய கால்நடைகளுக்கும் குடிக்கக் (கொடுத்தார்களே), இங்கே நீர்... தண்ணீரை நீர் வைத்திருப்பதாக கூறுகிறீரே. அவரைக் காட்டிலும் நீர் பெரியவர் என்றா சொல்லுகிறீர்?’ என்றாள். 52.உரையாடல் தொடர்ந்து போய்க் கொண்ருந்தது. அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவளுடைய ஆவியோடு தொடர்பு கொண்டு கொண்டிருந்தார், பாருங்கள். அவளுடைய பிரச்சனை என்னவென்று அவர் கண்டுபிடித்த போது அவர் அவளுடைய பிரச்சனையைக் கண்டுபிடித்தார். அவர், ‘ஸ்திரீயே, நீ போய், உன்னுடைய புருஷனை அழைத்துக்கொண்டு இங்கே வா’ என்றார். 53.அதற்கு அவள், ‘எனக்கு எந்த புருஷனும் இல்லை’ என்றாள். 54.அவர், ‘அது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்; இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருப்பவனும் உன்னுடைய புருஷனல்ல: நீ உண்மையைச் சொன்னாய்’ என்றார். 55.இப்பொழுது, அவள் என்ன கூறினாள்? ‘சொல்லும், நீர் ஒரு குறிசொல்பவரா? இது மனதிலுள்ளதைப் படித்தறிதலா? நீர் பெயல்செபூலா?’ என்றா கூறினாள்? இல்லை, ஐயா. ஐக்கிய நாடுகளிலுள்ள பாதி பிரசங்கிமார்கள் தேவனைக் குறித்து அறிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் அதிகமாக அவள் அறிந்திருந்தாள். அவள் ஒரு வேசியாக இருந்தாள். (யோவான் 4:19,25) 56.அவள், ‘ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்’ என்றாள். இப்பொழுது, நீங்கள் அந்த மேற்கோளைத் தொடர்ந்து போவீர்களானால், அது மோசே உரைத்திருந்தவராகிய அந்தத் தீர்க்கதரிசியிடமே திரும்பிச் செல்கிறது. ‘நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். நாங்கள் சமாரியர்கள் என்று அறிவோம்,’ இப்பொழுது அவர்கள் எவ்வாறு கற்பிக்கப்பட்டிருந்தனர் என்பதைக் கவனியுங்கள், பாருங்கள், ‘மேசியா வரும்போது, அவர் இவைகளை எங்களுக்குச் சொல்லுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நீர் யார்?’ 57.அது என்னவாக இருக்க வேண்டியிருந்தது? மேசியாவின் அடையாளம். அது யூதனுக்கும் சமாரியனுக்கு மாக இருந்தது. புறஜாதிகள் அஞ்ஞானிகளாக இருந்தார்கள். எந்த மேசியாவைக் குறித்தும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் விக்கிரகங்களையும், சூரிய தேவர்களையும், மற்றும் ஒவ்வொன்றையும் தொழுதுகொண்டு வந்தார்கள். அதுதான் நம்முடைய-நம்முடைய வர்க்கமாக உள்ளது. பாருங்கள். (யோவான் 4:25,26,29) 58.மேலும், ‘மேசியா வரும்போது... நாங்கள் அறிவோம்’ என்றாள். ஆகையால் தான் அவர் அதை அறிவிக்க வேண்டியிருந்தது, அவர்கள் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தனர். ‘அவர் வரும்போது, அவர் இவைகளை எங்களிடம் கூறுவார் என்று நாங்கள் அறிவோம். ஆனால் நீர் யார்?’ 59.அதற்கு அவர், ‘உன்னிடம் பேசுகிற நானே அவர்’ என்றார். 60.உடனே அவள் பட்டணத்திற்குள் ஓடி, ‘நான் செய்தவைகளை என்னிடம் கூறின ஒரு மனுஷனை வந்து பாருங்கள்: அவர் அதே மேசியாவல்லவா?’ என்றாள். 61.அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களான இஸ்ரவேலருக்கு அவர் அந்தவிதமாக தம்மைத்தாமே அறியப்பண்ணி, அதோடு கூட அவர் வருவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமாரியர்களுக்கும் அந்தவித மாகவே அவர் அறியப்பண்ணினார் என்றால், அவர் வரும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைக்குள்ள புறஜாதியைக் குறித்து என்ன? அவர் அந்தவிதமாக நடந்து கொண்டு, அவரால் மாற முடியாமல், அவர் தேவனாக இருந்து, தம்மைத்தாமே மேசியாவாக ஆக்கும்படியாக அவர் அவர்களுக்குக் காண்பித்த அடையாளமாக அது இருக்குமானால்: உண்மையான யூதன் அதை விசுவாசித்தான். 62.ஓ, அந்தப் பெரிய கடினமான விறைப்பானவன் அதை விசுவாசிக்கவில்லை. அவன் பரிசுத்தமும் சுத்தமுமான மனிதனாக இருந்த போதிலும், துவக்கமுதலே அவன் அதை விசுவாசிக்கவில்லை; அவன் ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். 63.ஆனால் வேதசாஸ்திரிகளோ, அதைப் போன்றவர் கள் இன்று நமக்குக் கிடையாது: அவன் ஒரு ஆசாரியனாக இருக்கக் கூடும் முன்பே, அவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைமுறை வழியாகக் கூட வர வேண்டியிருந்தது. அவனுடைய தகப்பனாருக்கு, தகப்பனாருக்கு, தகப்பனாருக்கு தகப்பனாருக்கு தகப்பன் ஒரு ஆசாரியனாக இருந்தான், அவன் அந்த வம்சவரிசையில் வர வேண்டியிருந்தது, அவன் பரிசுத்தமானவனாகவும் களங்கமில்லாதவனுமாகவும் இருக்க வேண்டியிருந்தது. அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. 64.நீங்கள் ஒருக்கால் ஒருபோதும் ஒரு பொய்யும் சொல்லாமல் இருக்கலாம், உண்மையாக ஜீவிக்கலாம், ஒவ்வொரு இரவும் சபைக்குப் போகலாம், பயபக்தியாக இருந்து, உங்கள் தசமபாகங்களைச் செலுத்தலாம், மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்யலாம், பலிபீடத்தில் முழங்கால்படியிட்டு, ஆராதிக்கலாம், (அப்படியிருந்தும்) ஒரு மார்ட்டின் பறவை அதனுடைய கூண்டுக்கு (box) போவது போல, நரகத்துக்குப் போகலாம். அதைத்தான் வேதவாக்கியம் கூறுகிறது. அதைத்தான் காயீன் செய்தான். ஆனால் எப்படியும் சுயமாக தங்களை நீதிகரித்துக்கொள்ளும் (self- style) நம்முடைய மார்க்கமானது நம்மை எங்கு கொண்டு போயிருக்கிறது? அது நம்மை தேவனை விட்டுத் தூரமாக அனுப்பிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக, அவ்வாறு தான். (யோவான் 1:49,50) 65.இப்பொழுது, கவனியுங்கள். யூதன், மிகவும் உண்மையான யூதன் அதை விசுவாசித்தான். அந்த அடையாளம் நடப்பிக்கப்பட்டதை அவன் கண்ட உடனே, அவன், ‘அது மேசியா தான். நீர் தேவனுடைய குமாரன்; இஸ்ரவேலின் இராஜா’ என்றான். 66.இயேசு, ‘நீ வருவதற்கு முன்பாக நீ அந்த மரத்தின் கீழிருந்தாய் என்று நான் சொன்ன போது நீ விசுவாசித்தாயே அந்த காரணத்தினாலா, நீ விசுவாசிக்கிறாய்? இவைகளைப் பார்க்கிலும் பெரிதானவைகளைக் காண்பாய்’ என்றார். (யோவான் 4:25,26,29) 67.கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயும், ‘மேசியா இந்தக் காரியங்களைச் செய்வார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனென்றால் அது நடப்பதற்காகவே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீர் யார்? நீர் ஒரு தீர்க்கதரிசியா?’ என்றாள். 68.அவர், ‘நான் மேசியா’ என்றார். 69.உடனே அவள் வந்து, அந்த மனிதர்களிடம், ‘இப்பொழுது, மேசியா இவைகளைச் செய்வார் என்று நீங்கள் எனக்குக் கற்பித்திருக்கிறீர்களே. இப்பொழுது, நான் செய்தவைகளை என்னிடம் கூறின ஒரு மனிதர் அங்கே வெளியே இருக்கிறார். இவர் மேசியா அல்லவா?’ என்றாள். 70.இப்பொழுது, அவர் அதேவிதமாக நடந்து கொள்ள வேண்டுமானால்... அது ஒரு புறஜாதிக்கு முன்பாக ஒருபோதும் செய்யப்படவில்லை என்பதை இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். பாதி அந்தகாரமும் பாதி வெளிச்சமுமாயிருந்த 2000 வருடங்களை நாம் கொண்டிருந்தோம்; அது சபையைச் சேர்ந்து கொள்ளுதல். ஆனால் அவர் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு, உதித்த கிறிஸ்துவாக தம்மைத்தாமே வெளிப்படுத்தாமல் போனால், அவர் அநீதியுள்ளவராகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறவராகவும் இருப்பார். 71.நமக்குப் பெரிய சபைகள் இருப்பதன் காரணத்தினால் அல்ல: அது அடையாளமல்ல. நாம் தேசத்தினூடாகப் போய், பில்லி கிரஹாமும், ஓரல் ராபர்ட்ஸ்ம், மற்றும் நாம் எல்லாருமே சபைக்குள் மகத்தான அங்கத்தினர்களை உடையவர்களாயிருந்த காரணத்தினால் (அல்ல): அது அடையாளமல்ல. அது அடையாளமேயல்ல. அவர் செய்தது அதுவல்ல: அவர், ‘இங்கே கவனியுங்கள், யோவானுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக கூட்டத்தை நான் இழுத்துக்கொள்வேன்’ என்று அவர் சொல்லவில்லை. அது ஒரு அடையாளமல்ல. ஆனால் மேசியாவின் அடையாளம் என்பது அவர் செய்ததாக நான் இங்கே பேசிக் கொண்டிருந்தது தான். 72.அந்த யூதர்களுடைய காலத்திற்கு முன்பே அவர் அதைச் செய்திருந்து, அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, அறுப்புண்டு போனவர்களும், கலப்பின வம்சாவளியில் வந்தவர்களுமாகிய அவர்களுக்கு செய்திருப்பாரானால், இந்தப் புறஜாதி காலத்திற்கு முன்பாகவும் அவர் அதே காரியத்தைச் செய்தாக வேண்டும், அல்லது அவர் அங்கே முன்காலத்தில் அந்தவிதமாக நடந்து கொண்ட போது, அவர் தவறு செய்தார். நம்முடைய எல்லா வேதசாஸ்திரங்களோடும், அதைப் போன்ற காரியங்களோடும் அவர் நம்மை உள்ளே போக விட்டு, அவர்கள் அழிந்து போவதற்கு முன்பாக அவர் அவர்களிடம் செய்தது போன்று தம்மைத்தாமே வெளிப்படுத்தவில்லை என்றால்... 73.காலம் சமீபமாயுள்ளது என்பதை நிரூபிக்கும் படியான மகத்தான அடையாளமாக இது உள்ளது. அந்த யூதர்களுக்கும் அது சமீபமாயிருந்தது. புறஜாதி யுகம் தான் முடிவு என்றும், அதன்பிறகு அவர் மீண்டும் யூதர்களிடம் திரும்ப வேண்டும் என்றும் ஒவ்வொரு வேதாகமப் போதகரும் அறிவார்கள். தேவன் ஹிட்லருடைய இருதயத் தையும், முசோலினியின் இருதயத்தையும், அந்த சர்வாதிகாரிகள் எல்லாருடைய இருதயத்தையும், ரஷ்யாவையும் கடினப் படுத்தி, அந்த யூதர்களைத் திரும்ப பாலஸ்தீனத்திற்குள் துரத்தினார், அங்கே தான் அவர்கள் நிற்கும்படி அனுமதிக்கப்பட்டனர். 74.என்னிடம் ஒரு திரைப்படம் உள்ளது: அது விஞ்ஞானத்தின்படி நடுஇரவுக்கு முன்பாக மூன்று நிமிடங்கள். அந்த யூதர்கள் தங்களுடைய அன்பார்ந்தவர்களையும், வயதானவர்களையும், முடமானவர்களையும் தங்கள் முதுகில் சுமந்து கொண்டு உள்ளே வந்து கெண்டிருந்தார்கள். லுக் பத்திரிகையிலும், லைஃப் பத்திரிகையிலும் நீங்கள் அதைக் காணலாம், அவர்கள் ஈரானிலிருந்தும், அந்த இடங்களி லிருந்தும் அந்த வயதான யூதர்களைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் அவர்களிடம் போய், கோடகுரோம் (Kodachrome) நிறத்தில் அவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, ‘நீங்கள் மரிக்கவா சொந்த தேசத்திற்கு திரும்பி வந்து கொண் டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். 75.அதற்கு அவர்கள், ‘இல்லை, நாங்கள் மேசியா வைக் காண்பதற்குத் திரும்பிவந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் மரிக்கும்படியாகத் திரும்பி வந்து கொண்டிருக்க வில்லை. நாங்கள் மேசியாவைக் காணவே திரும்பி வந்து கொண்டிருக்கிறோம்’ என்றார்கள். (மத்தேயு 24:32-34) (லூக்கா 21:30-32) 76.இயேசு, ‘அத்திமரம் துளிர்விடும் போது, இந்த சந்ததி’ (நாற்பது வருடங்கள்), ‘இவைகள் எல்லாம் சம்பவிக்கும் வரையில், (இந்த சந்ததி) ஒழிந்து போவதில்லை’ என்றார். 77.உங்களுக்கு அது புரிகிறதா? என்ன நடந்து கொண்டிருக்கிறது? புறஜாதிகளுக்கான கடைசி அழைப்பு (போய்க்) கொண்டிருக்கிறது. தேசங்கள் எந்த நேரமும் உடைந்து தூளாகிப் போக ஆயத்தமாயிருக்கிறது. அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, அது சம்பவிக்கக் கூடும் முன்பே, முதலில் சபையானது வீட்டிற்குப் போகிறது. காலை வருவதற்கு முன்பாகவே, நாம் தூள் தூளாகிப் போய், நியாயத்தீர்ப்பு இருக்கக் கூடுமானால், சபையானது வீட்டிற்குப் போவதைக் குறித்து என்ன? அது எந்த நிமிடத்திலும் வரலாம். நிச்சயமாக. ஓ, ஜனங்களே, விழித்துக் கொண்டு, வார்த்தையை வாசிப்பதின் மூலம் உங்களுக்குள்ளிருக்கும் உங்கள் ஆவிக்குரிய ஆத்துமாவை அசைத்துக் கொள்ளுங் கள். நாம் முடிவில் இருக்கிறோம். காலம் சமீபமாயுள்ளது. 78.நாம் வேதசாஸ்திரத்தைக் கொண்டிருந்தோம், நமக்கு சபைக்காலம் இருந்தது, ஆனால் இதுவே நேரம். மேலும் இப்பொழுது, யூதர்களுக்கு கடைசி அடையாளம், அது என்னவாக இருந்தது? கர்த்தராகிய இயேசு தரிசனமாகுதல். புறஜாதிகளுக்கும் கடைசி அடையாளம் என்னவென்றால், அவர் மறுபடியுமாக தம்முடைய சபைக்குள் பரிசுத்த ஆவியானவரின் ஆவிக்குள் வந்து, அப்போது அவர் செய்த அதே காரியங்களை செய்து, அவர் தம்மைத்தாமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார் என்பதை வெளிப்படுத்துவதும் தான். நீங்கள் கருத்தூன்றிக் கவனித்து, செய்தித்தாளை வாசிக்கலாம், வானங்களில் எழுதப்படுவதையும் காணலாம். நீங்கள் பாருங்கள், நாம் தண்டனைக்குக் குறிக்கப்பட்டுள்ளோம். அதற்கு வெளியே நமக்கு வேறெந்த வழியும் கிடையாது. 79.இந்தத் தேசம் அது செய்து கொண்டிருக்கும் பாவங்களோடு தொடர்ந்து போக தேவன் அனுமதித்து, அவர் ஒரு நீதியான தேவனாக இருக்கக் கடமைப்பட்டவராயிருப்பா ரானால், அவர் சோதோமையும் கோமோராவையும் எழுப்பி, அவைகளைச் சுட்டெரித்து அழித்துப் போட்டதற்காக தேவன் அவைகளிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டவராயிருப்பார். நாம் செய்து கொண்டிருக்கும் அதே பாவங்களையே அவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். தேவன் பாவிகளை நேசிக்கிறார், ஆனால் அவர் பாவத்தை வெறுக்கிறார், அவர் நீதியுள்ளவர், அது நியாயந்தீர்க்கப்பட்டாக வேண்டும். (எபிரெயர் 13:8) 80.அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்: அவருடைய குமாரன் இன்று பரிசுத்த ஆவியானவரின் ரூபத்தில் தேசத்தினூடாக அசைவாடிக் கொண்டிருக்கிறார்; சபையானது அதை உதறித் தள்ளி வெறுத்து ஒதுக்கி, அதிலிருந்து தூரமாகப் போய், அதைப் பார்த்து கேலிப் பரியாசம் பண்ணிக் கொண்டிருக்கிறது, எனவே அவர் நியாயத்தீர்ப்பை அனுப்பும்படியாக நீதியுள்ளவராக இருக்க முடிகிறது: அதைத் தான் அவர் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அங்கே தம்மைத்தாமே வெளிப்படுத்தின அந்த அதே கர்த்தராகிய இயேசு, இவைகள் எல்லாம் நடக்கும் என்று வாக்குப்பண்ணி, தீர்க்கதரிசனம் உரைத்து, கூறியுள்ளார்: இதோ அவைகள் இருக்கின்றன. அதைக் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்? நண்பனே, நாம் அதை ஏற்றுக்கொள்வோம். நாம் அதை விசுவாசிப்போம். 81.இதோ இங்கே ஒரு சிறு காட்சி இருக்கிறது; யாரோ ஒருவர் அதைக் குறித்து என்னிடம் கேட்டார்: அந்த ஒளியைக் குறித்து. இப்பொழுது, என்னைக் குறித்து மறந்து விடுங்கள். நான் வெறுமனே ஒரு மனிதன் தான், பாருங்கள். நாம் அந்த ஒளியைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அது ஒரு அக்கினிஸ்தம்பமாக இருக்கிறது. ஊஆஐ துப்பறியும் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் ஜே. லேசி, கைரேகை மற்றும் ஆவணங்களை (ஆராயும்) அவர் அதை பரிசோ தித்துப் பார்த்தார். அது அதோ அங்கிருக்கிற வாஷிங்டன் டிசியில் மதசம்பந்தமான கலைக்கூடத்தில் தொங்கிக் கொண் டிருக்கிறது: இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனானது எப்பொழு தாவது புகைப்படம் எடுக்கப்பட்டிருக்குமானால், அது இது மாத்திரமே. அது சுவிட்சர்லாந்தில் உள்ளது; அது ஜெர்மனியில் இருக்கிறது: அங்கே அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். (மத்தேயு 11:25) (லூக்கா 10:21) 82.அது ஏன் எல்லா திக்கிலும் பரவிச் செல்வதில்லை? இது ஏன் அறியப்படவில்லை? இது அறியப்பட முடியாது. அது கடந்து போகும் மட்டுமாக அவர்கள் இவைகளை ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர் இதை ஞானிகளின் கண்களுக்கும் கல்விமான்களின் கண்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ள விரும்பும் அப்படிப்பட்ட பாலகருக்கு வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். இயேசு அவ்வாறு கூறியுள்ளார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதற்காக தேவனுக்கு நன்றி. 83.கத்தோலிக்க ஜனங்களே, பரிசுத்த பாட்ரிக்கை உங்களுக்குத் தெரியவே தெரியாது. அவர் துவக்க முதலே ஒரு கத்தோலிக்கரல்ல, உங்களுக்கு அது தெரியும். ஆனால் அவர் மரித்து நீண்ட காலம் ஆன பிறகு, அவர் ஒரு பரிசுத்தவான் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டீர்கள். பரிசுத்த பிரான்ஸிஸ் அசிசியாரைக் குறித்து என்ன? அவர் தம்முடைய அக்குளில் ஒரு வேதாகமத்தை வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த பிரசங்கியாராக இருந்தார். நீங்கள் அப்போது அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 84.ஜோன் ஆஃப் ஆர்க்கைக் குறித்து என்ன? கத்தோலிக்க சபையானது ஒரு கம்பத்தில் வைத்து அவளைச் சுட்டெரித்துப் போட்டது, அவள் இரக்கத்துக்காக அலறிச் சத்தமிட்டாள். நீங்கள் அவளை ஒரு சூனியக்காரி என்றும், ஒரு பெயல்செபூல் என்றும் சுட்டெரித்துப் போட்டீர்கள். அவள் ஆவியால் நிறைந்த ஒரு பெண்ணாக இருந்து, தரிசனங்களைக் கண்டு, அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பித்தாள், நீங்களோ அவளை ஒரு சூனியக்காரி என்றும், ஒரு பெயல்செபூல் என்றும் சுட்டெரித்துப் போட்டீர்கள். ஆனால் ஏறக்குறைய நூறு வருடங்கள் கழித்து, அவள் ஒரு பரிசுத்தவாட்டி என்று நீங்கள் அடையாளம் கண்டுகொண்டீர்கள். நீங்கள் நிச்சயமாக, அப்போது வருத்தம் தெரிவித்து, அந்த சாமியார்களின் சரீரத்தை தோண்டியெடுத்து, அதை ஆற்றில் எறிந்து போட்டீர்கள். இப்பொழுது, அவள் புனிதையாக்கப்பட்ட ஒரு பரிசுத்தவாட்டியாக இருக்கிறாள். (மத்தேயு 11:25) (லூக்கா 10:21) 85.தேவன் எப்போதுமே அவருடைய இரக்கத்தையும், அவருடைய அடையாளத்தையும் அனுப்புகிறார்; அவர் ஞானிகளுடைய கண்களுக்கும் கல்விமான்களுடைய கண்க ளுக்கும் மேலாகச் சென்று, பாலகருக்கு வெளிப்படுத்துகிறார்; அவர் தம்முடைய சபையை அழைத்து அதை முத்திரையிடுகிறார்; அங்கே அது போகிறது. அவர் நீதியுள்ளவராயிருக்கிறார். அவர் அதை அனுப்பியுள்ளார். அவர் தம்முடைய வார்த்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறார். (எரேமியா 5:21) (மாற்கு 8:18) 86.அந்நாளில் அங்கிருந்த அந்த யூதர்களில் அநேகரைக் கவனியுங்கள், மத்தேயு 12ல், அவர் செய்தவைகளை அவர்களில் அநேகர் கண்டும், இன்னுமாக அவர்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லை என்று அவர் கூறினார், ஏனென்றால் தீர்க்கதரிசியாகிய ஏசாயா, ‘அவர்களுக்கு கண்களிருந்தும் காண முடியாமலும், காதுகளிருந்தும் கேட்க முடியாமலும் இருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறான்; அவர்கள் குருடாகியிருக்கிறார்கள். 87.புறஜாதிகளும் கோட்பாடுகளினாலும் ஸ்தாபனங் களினாலும் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த விளங்காத இரகசியத்தைக் காணவும், உயிர்த்தெழுந்த இயேசு அவருடைய சபையின் மத்தியில் தமது ஆவியில் அசைவாடிக் கொண்டிருக்கிறதையும், அவர் செய்து வருகிற காரியங்களைச் செய்து கொண்டிருப்பதையும், சரியாக இங்கே முடிவுகாலத்தில் இருப்பதையும் காணத் தவறி விடுகிறார்கள். 88.ஓ, தேவனே, எங்கள் கண்களைத் திறந்தருளும். எங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. (மத்தேயு 9:21) (மாற்கு 5:30) (லூக்கா 8:45) 89.நாம் முடிப்பதற்கு முன்பாக, அவர் செய்த இன்னுமொரு காரியம் உண்டு. ஒருநாள் அவர் கடந்து போய்க் கொண்டிருந்தார்... அவர் எந்தத் தரிசனத்தையும் காணவில்லை. அவர் ஒரு சிறு மக்கள் கும்பலினூடாக கடந்து போய்க் கொண்டிருந்தார், அவர்கள் எல்லாரும் அவரை இடித்துக்கொண்டும், அவருடைய கரங்களைக் குலுக்கிக் கொண்டும், எல்லாவற்றையும் செய்து கொண்டும், மற்றும் அதைப் போன்றவைகளைச் செய்து கொண்டும் இருந்தனர். ஒரு-ஒரு சிறு பெண்மணி தன்னுடைய இருதயத்திற்குள், ‘நான் அவரை ஒரு பரிசுத்தராக விசுவாசிக்கிறேன். அவர் தேவ குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான்-நான்- நான் வெறுமனே ஒரு சிறு பெண் தான்’ என்று கூறினாள். அவளுக்கு மாதவிடாய் சமயத்தின் போது, உதிரப்போக்கு இருந்தது, அது, அநேக வருடங்களாக அவளுக்கு அது இருந்தது, அவர்களால் அதை நிறுத்த முடியவில்லை. மருத்துவர்களால் அதைக் குறித்து எதுவும் செய்ய முடிய வில்லை. அவள், ‘அவருடைய வஸ்திரத்தைத் தொட என்னால் கூடுமானால், நான் சுகமடைவேன் என்று விசுவாசிக்கிறேன்’ என்று சொல்லி, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இப்பொழுது, பாலஸ்தீனிய வஸ்திரமானது தளர்த்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும்; உங்களால் அதைத் தொட முடியாது... அதனுடைய ஓரம், அதாவது அதனுடைய அடிப்பகுதியானது தளர்த்தியான விதத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். அவள் அந்த வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவள் அநேகமாக அவருக்குக் கீழே உட்கார்ந்து கொண்டு, அந்த ஓரத்தைத் தொட்டாள். அவர் சற்று நடந்து சென்று, திரும்பிப் பார்த்து, அவர், ‘என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்டார். 90.அது நேற்றைய இயேசுவாக இருந்தது. வேதாகமம், இன்றிரவு, ‘அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியராக இருக்கிறார்’ என்று கூறுகிறது. அது சரிதானா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (மத்தேயு 9:22) (மாற்கு 5:30,31,34) (லூக்கா 8:45,46,48) 91.அந்த ஸ்திரீ அவரைத் தொட்டாள். அவர், ‘என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்டார். 92.பேதுரு அங்கு இருந்தான்... ஓ, அவன் பெரியவ னாக உணர்ந்தான், ஏனென்றால் அவன் ஒருவிதத்தில் அந்த அப்போஸ்தலர்களுக்கெல்லாம் பிரதானமானவர்களில் ஒருவனாக இருந்தான், அவன், ‘இப்பொழுது,’ என்று கூறி விட்டு, கர்த்தராகிய இயேசுவைக் கடிந்து கொண்டு, ‘நீர் ஏன் அப்படிப்பட்ட அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கேட்கிறீர்? நல்லது, உம்மைத் தொட்டது யார் என்று யாரால் தான் சொல்ல முடியும்? எல்லாருமே உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே’ என்றான். 93.அதற்கு இயேசு, ‘ஆனால் நான் பலவீனமடைந் தேன். வல்லமை என்னை விட்டுப் புறப்பட்டுச் சென்றது’ என்றார். ஓ, அதுதான் நியூ ஹேவன் ஜனங்களாகிய நீங்கள் தொடுகிற தொடுதல் என்று நம்புகிறேன். 94.‘நான் பலவீனமடைந்திருப்பதாகக் காண்கிறேன். வல்லமை என்னை விட்டுப் புறப்பட்டது.’ எல்லாரும் அமைதியாக இருந்தனர். அங்கே நின்று கொண்டிருந்த அவருடைய சிறு ஜனக்கூட்டத்தார் எல்லாரையும் சுற்றி நோக்கிப் பார்த்தார், அந்த ஆற்றைச் சுற்றிலுமிருந்த அந்த மீன்பிடிக்கிறவர்களையும் நோக்கிப் பார்த்தார். அவர் அங்கே வெளியே நோக்கிப் பார்த்த போது, அந்தச் சிறு பெண்ணைக் கண்டார். உண்மையான விசுவாசம் என்றால் என்ன என்று கூறக்கூடிய வல்லமையால் அவர் தரிப்பிக்கப்பட்டிருந்தார். அவர் அந்தப் பெண்ணிடம் அவளுடைய நிலைமையைக்கூறி, ‘உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்றார். (எபிரெயர் 4:15) (எபிரெயர் 13:8) 95.அது நேற்றைய இயேசுவாக இருந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவும், நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது, புதிய ஏற்பாட்டு எபிரெயரில் (அது உள்ளது). 96.அப்படியானால், அவர் இன்னும் பிரதான ஆசாரியராக இருப்பாரானால், நீங்கள் இப்பொழுது இருக்கிற இடத்தில் இருக்கும் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் அவரைத் தொட்டு, ‘ஓ தேவனே, இயேசுவே, நான் உம்மைத் தொடட்டும், நான் உம்மை விசுவாசிக்கிறேன்’ என்று கூறுவீர்களானால், உணர்ச்சிவசப்படுதல் அல்ல, ஆனால் அப்படியே அவரைத் தொடுங்கள், அப்போது அவர் எப்படி செயல்படுவார்? அவர் அப்போது என்ன செய்தாரோ அதேவிதமாகவே நடந்து கொள்ள வேண்டும், அல்லது அவர் மாறாத இயேசு அல்ல. பாருங்கள்? அவர் திரும்பப் பேசி, அவருடைய சபையின் உதடுகளை உபயோகித்து, அதே காரியத்தைச் சொல்லியாக வேண்டும், ஏனென்றால் நாம்... கொடிகளாயிருக்கிறோம், அவர் திராட்சச்செடியாக இருக்கிறார். அவர் சரியாகத் திரும்பப் பேசி, அவர் அப்போது செய்த அதே காரியத்தைச் சொல்லியாக வேண்டும், அல்லது அவர் மாறாத இயேசு அல்ல, அல்லது அவர் மாறாத பிரதான ஆசாரியராக இல்லாமல், வேறொருவராக இருக்கிறார். 97.ஆனால் அவர் இன்றிரவும் ஜீவிக்கிறார். ஓ, நண்பனே, நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடை கிறேன். அவர் ஜீவிக்கிறார்! இந்த நாளில் நாம்... நாம் இளைப்பாறக் கூடிய ஒரு காரியமும் இல்லை, நீங்கள்- நீங்கள்... நாம் அப்படியே... நாம் முடிந்து விட்டோம். நிலைநிற்கக் கூடிய ஒரு காரியம் மாத்திரமே உண்டு, அதுதான் தேவனுடைய இராஜ்யம். 98.நம்முடைய தேசமா? அது போய் விட்டது. அவள் உட்பகுதி வரை கரையான்களால் அரிக்கப்பட்டிருக்கிறாள். நான் எகிப்திய பார்வோன்கள் இருந்த இடங்களில் நின்றிருக்கிறேன்; அவர்களுடைய அரண்மனைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், இருபது அடி தோண்டியாக வேண்டும். சீஷர்கள் (Caesars) இருந்த ரோமாபுரியிலும் அதே விதமாகத்தான் இருக்கிறது. எல்லா இராஜ்யங்களும் விழுந்து தூள் தூளாகிப் போய் விட்டது, ஏனென்றால் ஒருபோதும் விழுந்து போக முடியாத ஒரு இராஜ்யம் வந்து கொண்டிருக்கிறது, அதுதான் தேவனுடைய இராஜ்யம். இந்த மற்றவைகள், நிலையற்ற எல்லாமும் என்றென்றும் நிலைத்திருப்பவைகளுக்கு அதைக் கொடுத்து விடுகிறது. (மத்தேயு 4:8-10) (லூக்கா 4:5-8) 99.ஆனால் நமக்கிருக்கிற இந்த மகத்தான தேசம்; சூரியனுக்குக் கீழேயுள்ள ஒவ்வொரு தேசமும் பிசாசினாலே ஆளப்படுகிறது என்று இன்னும் வேதாகமம் கூறுகிறது. இயேசு அவ்வாறு கூறியுள்ளார். எல்லா தேசங்களும் பிசாசினாலே ஆளப்படுகிறது. ஆகையால் தான் நாம் சண்டையிடுகிறோம், மற்றும் நாம் செய்கிற விதமாகக் காரியங்களைச் செய்து வருகிறோம். சாத்தான், ‘அவைகள் எல்லாம் என்னுடையவைகள்’ என்று சொல்லி, அவன் அவருக்குக் காண்பித்து, ‘இதோ, நீர் என்னைப் பணிந்து கொண்டால், இவை எல்லாவற்றையும் உமக்குக் கொடுப்பேன்’ (என்றான்). இயேசு அவைகளுக்கு சுதந்தரவாளி என்பதை அவர் அறிந்திருந்தார். அவர், ‘எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே’ என்றார். பாருங்கள்? அவர் அவைகளுக்கு சுதந்தரவாளியாக இருந்ததை அவர் அறிந்திருந்தார். 100.நாம்... காலம் வரையில். நமக்கு அற்புதமான ஜனாதிபதி இருக்கிறார். இப்பொழுது, நான் ஒரு அரசியல்வாதி அல்ல, ஆனால் திரு. ஐசன்ஹோவர் அவர்களை எனக்குப் பிடிக்கும், அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் டுவைட் ஐசன்ஹோவரை இந்த ஐக்கிய நாடுகளிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் நாம் வைப்போமானால், அவள் இன்னும் தொடர்ந்து பாவத்தை ஆசையோடு செய்து கொண்டு தானிருப்பாள். அவள் அவ்வாறு செய்வாள் என்று வேதாகமம் கூறுகிறது. அங்கே தான் காரியம். காலம் இதோ உள்ளது. 101.நண்பனே, கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் பின்லாந்துக்குப் பிரயாணம் பண்ணிச் சென்றேன், சரியாக முதல்... க்குப் பிறகு. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு. அந்த பின்லாந்து தேசத்துப் பெண்கள், இரவு நேரத்தில், அவர்கள் எல்லாரும் காப்புக்கவசத்தில் இணைத்து, அவர்களுக்குப் பின்பாக உழுத நிலத்தில் மண்கட்டிகளை உடைத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்; ஆண்களும் அவ்வாறே செய்து கொண்டிருந்தனர்; சிறு பிள்ளைகள் கண்ணாடி கூட்டு விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்தனர்; அவர்கள் இரவு நேரம் என்று நிறுத்தி விடவில்லை, அவர்கள் தொடர்ந்து அவ்விதமே செய்து கொண்டிருந்தனர். யுத்தம் முடிந்து விட்டது, அவர்கள் கோதுமையை பயிரிட வேண்டியிருந்தது. அவர்கள் கோதுமையைப் பயிரிடாவிட்டால், அடுத்த வருஷத்துக்கு அங்கே எந்த விளைச்சலும் இருக்காது, அவர்கள் எல்லாரும் பட்டினியால் மரித்து விடுவார்கள். சிறு பிள்ளைகள் கண்ணாடி கூட்டு விளக்கு களைக் கொண்டு நெடுக ஓடிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் மிகவும் களைப்படைந்திருந்தார்கள்; தாய்மார்கள் இழுத்துக் கொண்டிருந்தார்கள், வியர்வை வடிந்து கொண் டிருந்தது, தோள்கள் தேய்ந்திருந்தது மற்றும் ஒவ்வொன்றும்; வாலிப பெண்களும், மற்றும் எல்லாருமே அவ்வாறு இருந்தனர். தகப்பனார் பின்னால் வந்து, அந்த விதமாக கோதுமையை எறிந்து (விதைத்துக்) கொண்டிருந்தார். எந்தவிதத்திலும் அதை கொத்தி கிளறுகிறார்கள், அப்படியே மேற்பரப்பைக் கொத்திக் கிளறி, கோதுமையைப் பயிரிடு கிறார்கள். (ஏனென்றால்) வெண்பனி வந்து கொண்டிருக்கிறது; குளிர்காலம் முழுவதும் பனிபடர்ந்து காணப்படும். அப்போது கோதுமையும் இருக்காது, ஜீவனமும் இருக்காது. 102.சகோதரனே, அவ்விதமாகத்தான் இன்று தேவனுடைய இராஜ்யத்திற்குள்ளும் இருக்கிறது: நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. பெரிய எழுப்புதல்களை நிறுத்துவதற்கு நமக்கு நேரம் இருக்க முடியாது, நாம் மேற்பரப்பைக் கொத்திக் கிளறி, விதையை ஊன்றியாக வேண்டும்…